பயனுள்ள மருத்துவ குறிப்புகள்..!! 3
மஞ்சள்;
மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், விளக்கில் மஞ்சளை சுட்டு அந்த புகையை மூக்கில் காட்டினால் உடனே சரியாகும். கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும், கட்டியாவதையும் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடற்பூச்சிகளை கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோய்களை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளி, சரும நோய்களை போக்கும்.
மிளகு;
இது சிறந்த ஆன்ட்டிபயாடிக் ஆகும். சாதாரண சமையலில் மிளகும் சீரகமும் சேரும்போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடும். 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு வீக்கத்தை குறைக்கும். வாய்ப்புண், நெஞ்சில் சளி ஆகியவற்றை குணமாக்கும். அதிக அளவு வியர்வையை தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது.
சீரகம்;
சீரகத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே, அது பூஞ்சைத் தொற்றுக்கு எதிராகவும் போராடக்கூடியது. சிறுநீரகங்களின் செயல்பாடு சீராக இருக்க உதவுகிறது. சீரகம் ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தை சரியான நிலையில் வைக்கக் கூடியது. வயிற்றுச் சூட்டைத்தணிக்கும்.
வெங்காயம்;
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. குளிர்ச்சி உண்டாக்கி ரத்தத்தை தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டது வெங்காயம். வெங்காயம் இதயத்தின் நண்பன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
பெருங்காயம்;
சமையலில் ரசத்தையும், சாம்பாரையும் மணக்க வைக்கும் பெருமை பெருங்காயத்தை தான் சேரும். காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது. தானும் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும்.
இஞ்சி:
பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் கடினமான உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்யும். காலையில் வெறும் வயிற்றில் பெரு விரல் அளவுக்கு இஞ்சியை தோல் சீவி விட்டு வாயில் போட்டபின் சிறுக சிறுக ஊரும் எச்சிலை விழுங்க சற்று நேரத்தில் நல்ல பசி எடுக்கும்.
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால் வலி கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
சோளம்;
சோளத்தில் உடலுக்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து ஆகிய அனைத்துமே நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடலின் தேவையற்ற எடையைக் குறைக்க உதவும். கரோட்டின் கண்களுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. தயமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சோளத்தில் தோசை, அடை, வடை, வெண்பொங்கல் என
விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
தினை;
வைட்டமின் பி ஊட்டச்சத்தும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் நிறைந்த இது எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தினையில் இட்லி, தோசை, பொங்கல், அதிரசம், முறுக்கு ஆகையவை
செய்யலாம்.
பனிவரகு;
நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பணியாரம் செய்து சாப்பிடலாம்.
வரகில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி, நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டும். கண் நரம்புகளுக்கு ஏற்றது. கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை அளிக்கும். செரிமான மண்டலத்துக்கு ஏற்றது. மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும். நிணநீர் மண்டலத்தை வலுவாக்கும். வரகில் இட்லி, தோசை போன்றவை செய்து
சாப்பிடலாம்.
கேழ்வரகு;
இதில் உள்ள டிரிப்டோன் எனும் அமினோ அமிலம் பசிக்கும் உணர்வை நெடுநேரம் தக்கவைத்திருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்படும். இதன் பைட்டோகெமிக்கல்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லவை. லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகின்றன. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடலாம். பால் சுரப்பை மேம்படுத்தும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். கேப்பையில் தோசை வார்த்துச் சாப்பிடலாம்.
மூக்கடைப்பு ஏற்பட்டவர்கள், விளக்கில் மஞ்சளை சுட்டு அந்த புகையை மூக்கில் காட்டினால் உடனே சரியாகும். கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும், கட்டியாவதையும் குணப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தி குடற்பூச்சிகளை கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோய்களை கட்டுப்படுத்தும். நெஞ்சு சளி, சரும நோய்களை போக்கும்.
மிளகு;
இது சிறந்த ஆன்ட்டிபயாடிக் ஆகும். சாதாரண சமையலில் மிளகும் சீரகமும் சேரும்போது, அதன் ருசியும் மணமும் பன்மடங்கு கூடும். 10 மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு வீக்கத்தை குறைக்கும். வாய்ப்புண், நெஞ்சில் சளி ஆகியவற்றை குணமாக்கும். அதிக அளவு வியர்வையை தந்து, உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கக்கூடிய சக்தி கொண்டது.
சீரகம்;
வெங்காயம்;
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. குளிர்ச்சி உண்டாக்கி ரத்தத்தை தூய்மைப்படுத்தும் சக்தி கொண்டது வெங்காயம். வெங்காயம் இதயத்தின் நண்பன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப்பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது. யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப்பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும். முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும்.
பெருங்காயம்;
இஞ்சி:
கறிவேப்பிலை:
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்புச்சத்தும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால் வலி கண் பார்வை குறைபாடு உள்ளவர்களும் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்
சோளம்;
சோளத்தில் உடலுக்கு அவசியமான இரும்புச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து ஆகிய அனைத்துமே நிறைந்துள்ளன. இதில் உள்ள நல்ல கொழுப்பு உடலின் தேவையற்ற எடையைக் குறைக்க உதவும். கரோட்டின் கண்களுக்கும் நரம்புகளுக்கும் நல்லது. தயமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகிய நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. சோளத்தில் தோசை, அடை, வடை, வெண்பொங்கல் என
விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
தினை;
வைட்டமின் பி ஊட்டச்சத்தும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் நிறைந்த இது எலும்புகளை வலுவாக்கும். குடல் புண், வயிற்றுப் புண்களை குணமாக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். தினையில் இட்லி, தோசை, பொங்கல், அதிரசம், முறுக்கு ஆகையவை
செய்யலாம்.
பனிவரகு;
நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும். எலும்பு, மூட்டுகளுக்கு நல்லது. பனிவரகில் இட்லி, தோசை, குழிப் பணியாரம் செய்து சாப்பிடலாம்.
வரகில் புரதச்சத்து, கால்சியம், வைட்டமின் பி, நுண்ணூட்டச்சத்துக்கள், நார்ச்சத்து நிறைந்துள்ளன. வரகை நன்கு தோல் நீக்கி சுத்தம் செய்யாவிட்டால் தொண்டையில் அடைத்துக்கொண்டு ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தும். கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டும். கண் நரம்புகளுக்கு ஏற்றது. கால்சியம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை அளிக்கும். செரிமான மண்டலத்துக்கு ஏற்றது. மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும். நிணநீர் மண்டலத்தை வலுவாக்கும். வரகில் இட்லி, தோசை போன்றவை செய்து
சாப்பிடலாம்.
கேழ்வரகு;
இதில் உள்ள டிரிப்டோன் எனும் அமினோ அமிலம் பசிக்கும் உணர்வை நெடுநேரம் தக்கவைத்திருக்கும். செரிமானத்தை மேம்படுத்தும். கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புகள் வலுப்படும். இதன் பைட்டோகெமிக்கல்
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வல்லவை. லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்பை அகற்ற உதவுகின்றன. எனவே, உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடலாம். பால் சுரப்பை மேம்படுத்தும். ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும். கேப்பையில் தோசை வார்த்துச் சாப்பிடலாம்.
Comments
Post a Comment