ஏலக்காயில் உள்ள மருத்துவ பயன்கள்..!!


           ஏலக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், நச்சுக்களை சிறுநீரகம் மூலமாக வெளியேற்றிவிடும். மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு, நீர், மற்றும் கிருமிகளை வெளியேற்றும். சிறுநீரகப் பை, சிறுநீரகம், சிறுநீரகக் குழாய் ஆகியவற்றை சுத்தமாக்கும்.

        அதிக நறுமணமும் கார்ப்பு சுவையும் வெப்ப தன்மையும் கொண்ட இந்த ஏலக்காய், சிறுநீரை பெருக்க கூடியது. குறிப்பாக தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி கபம் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.

      ஏலக்காய் கெட்ட கொழுப்புகளை கட்டுப்படுத்துவதுடன், உடலில் உஅர் இரத்த அழுத்தத்தை குறைகின்றது. எனவே ஒரு கப் ஏலக்காய் டீ அருந்துவது மிகவும் ஆரோக்கியத்திற்கு நல்லது.வாயில் உள்ள கெட்ட கிருமிகளை அளிப்பதில் ஏலக்காய் சிறந்து விளங்குகிறது. மேலும் வாயில் ஏற்படும் கெட்ட துர்நாற்றங்களை போக்குகின்றது.

        பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகள் சரியாக, ஏலக்காயின் மேல் தோல் பகுதியை உரித்துவிட்டு உள்ளிருக்கும் எல்லரிசியை எடுத்து, காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.
பின்பு இரண்டு கிராம் ஏலக்காய் தூளை ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறுடன் கலந்து, ஒவ்வொரு வேளையும் உணவருந்திய பிறகு அருந்த வேண்டும்.

         ஜீரண உறுப்புகளின் கோளாறுகளை போக்குவதற்கு, வாய்ப் புண், வாய் அல்சர், மன அழுத்தம் என பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 
          சாதாரணமாக நாம் போடும் டீயில் ஏலக்காய் போட்டு குடித்தாலே மனமாக இருக்கும். ஏலக்காய் டீ குடிப்பது உடலுக்கு நன்மை பயக்கும். மேலும், என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

இதயம்;

         இதயப் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. இதிலும், தினந்தோறும் ஏலக்காய் டீ குடித்து வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தலைவலி;

      தலைவலிக்கு ஏலக்காய் ஒரு சிறந்த மருந்தாகும். தலைவலி உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிக்கலாம் அல்லது ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மொன்று சாப்பிட்டால் தலைவலி விரைவில் குணமாகும்.

உயர் இரத்த அழுத்தம்;

          உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பது நல்லது. ஏனெனில் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஓட்டம் மேம்பட்டு உயர் இரத்த அழுத்தம் குறைய பெரிதும் உதவுகிறது.

செரிமானம்;

          செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் ஏலக்காய் டீ குடிப்பதன் மூலம் குணமடையச் செய்யலாம். மேலும், அஜீரணக் கோளாரு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது நீங்கும்.

கேன்சர்;

     ஏலக்காயில் பாலிஃபினால் என்ற ஆன்டிஆக்ஸிடன் உள்ளது. இது நமது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. எனவே, நாம் புற்றுநோய் தாக்கத்தில் இருந்துத் தப்பிக்கலாம்.

Comments