நீரிழிவு நோயை தடுக, நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக நாவல் பழம்..!!



            
நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,   பல்வேறு விட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. 

        தோள்களில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும். வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். பசியைத் தூண்டக்கூடியது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய்களை தடுக்கும் அரும் மருந்து. நாவல்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.  எச்சரிக்கை:

       இரத்த உற்பத்திக்கு நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலதைக் கொடுப்பதுடன் உடலில் இரத்தம் அதிகமாக ஊறும்.

        நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். இதனை இரண்டு வேளைகள் என்று 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.
பித்தத்தைத் தணிக்கும், 
மலச்சிக்கலைக்குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்திசெய்யும்.
சிறுநீரகக் கற்கள் கரையவும், மண்ணீரல் கோளாறுகளைச் சரிசெய்யவும் நாவற்பழம் உதவுகிறது. நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.       

          கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டு சிறுநீர்ப்போக்குக் குறையும். 

         நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம்.

குறிப்பு;
           நாவல்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளவும். அதேபோல் நாவல் பழம் சாப்பிட்ட உடனே பால் அருந்த கூடாது. முக்கியமாக நாவல் பழங்களை அளவுக்கு அதிகமாக எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால், அவை உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு வழிவகுக்கும். 

Comments