கத்திரிக்காய்..!!

கத்தரிக்காயில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகள்;
                         
        கத்திரிக்காய்களில் தசைக்கும், ரத்தத்திற்கும் ஊட்டம் தருகிற வைட்டமின்கள் உள்ளது. இதனால் வாய்வு, பித்தம், கபம் போன்ற பிரச்சினைகள் அகன்று விடும்.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் A, C, B1, மற்றும் B2, காணப்படுகின்றன.
   இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது.
வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

        வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.

மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவைகளையும் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நன்மைகள்;

1).    கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் ரத்தத்தில் சேரும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

2).     நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுவதுடன், இதயத்தின் பலத்தை அதிகரிக்கிறது.


3).    கத்தரிக்காயில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் நம் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அதிகரிக்க உதவுகிறது.


4).     மலச்சிக்கலைப் போக்கி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது.


5).      கால்களில் வீக்கம் ஏற்பட்டால், அதற்கு கத்திரிக்காயை அரைத்து வீக்கமுள்ள இடத்தின் மீது தேய்த்து வந்தால், வீக்கம் குறையும்.


6).    கத்திரிக்காயை வேகவைத்து அதனுடன் பெருங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால், வயிற்று தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.


7).     வேகவைத்த கத்திரிக்காய் மற்றும் சிறிதளவு தேன் கலந்து மாலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை அகலும்.


8).     கத்திரிக்காயை நெருப்பில் சுட்டு வேகவைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், மலேரியா, மண்ணீரல் வீக்கம் குறையும்.


9).     கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.


10).   கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுப்பதோடு, மூளைக்கு வலிமையை அதிகரித்து, ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.


11).     இதிலுள்ள வேதிப்பொருட்கள் உடலின் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது,  விட்டமின் C, நுண்கிருமிகளை தடுத்து, தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.


12).     ஆன்த்தோ சயானின் எனும் வேதிப்பொருள் முதுமையை தடுத்து இளமை தோற்றத்தை பாதுகாக்க உதவுகிறது.


13).      பழுத்த கத்திரிக்காயை நல்லெண்ணெய் விட்டு வறுத்து சாப்பிட்டால், கடுமையான பல் வலி பிரச்சனைகள் குணமாகும்.

Comments

Post a Comment