வாய்வு தொல்லையிலிருந்து விரைவில் விடுபட..!!


          செரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி அது வாயு தொல்லையை ஏற்படுத்துகிறது. அதிக வேலைப் பளு, அதிக மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லைக்கு மிக மிக முக்கிய காரணமாகும். காலை உணவை தவிர்க்கும் பெரும்பாலோர் இந்த வாய்வுத் தொல்லையை அனுபவிப்பா்.

வீட்டில் உள்ள பல்வேறு  எளிய பொருட்களை கொண்டு வாயு தொல்லையை சுலபமாக விரட்டலாம்! 

வாயு தொல்லைக்கு பப்பாளி;
      வாயு உருவாகும் சமயங்களில் பப்பாளி பழத்தில் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுங்கள். இது வாயு கோளாறுகளை சமன் செய்கிறது. ஜீரண அமிலங்களை முறையாக தூண்டுகிறது. இதனால் வாய்வு உருவாவதை தடுக்கப்படுகிறது.

பட்டை;
       பட்டை கூட வாய்வு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் தரும். அதற்கு வெதுவெதுப்பான  பாலுடன், 1/4 டீஸ்பூன் பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து அந்த கலவையை மீண்டும் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடித்து வந்தால், கெட்ட நாற்றம் வீசும் வாய்வுத் தொல்லையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

சீரகதண்னீா்;
       
       ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு லிட்டர் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்கவைத்து வடிகடி தினமும் இதேபோல் பருக , வாய்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சமையல் சோடா மற்றும் எலுமிச்சை;
         1 லிட்டர் நீரில் அரை 1/2 எலுமிச்சையை பிழிந்து, அத்துடன் 1 டீஸ்பூன் சமையல் சோடா கலந்து தினமும் 4 முறை  குடிக்க கெட்ட துர்நாற்றம் வீசும் வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

புதினா;
        புதினாவை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி தேன் கலந்து தினமும் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும். புதினா அமில உற்பத்தியை தடுக்கிறது. வாய்வினால் அவதியுறும்போது புதினா இலைகளை மென்றாலோ அல்லது வெந்நீரில் புதினாவை நல்ல கொதிக்க வைத்து குடித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.

பூண்டு;
     
       பூண்டிற்கும் வாய்வு தொல்லையில் இருந்து நிவாரணம் தரும் குணம் உள்ளது. எனவே   அன்றாட  சமைக்கும் உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள் அல்லது தினமும் ஒரு பச்சை பூண்டு சாப்பிட்டு வர வாய்வு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஏலக்காய் டீ ;
     
      தினமும் டீ போடும் போது, அதில் 2 ஏலக்காயை போட்டு கொதிக்க விட்டு, அந்த டீயை குடித்து வந்தால், வாய்வுத் தொல்லையிலிருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.

பெருங்காயத் தூள்;
   
        உணவிலும், ரசத்திலும் நல்ல வாசனையைத் தரும் பெருங்காயத் தூளை,  தேங்காய் எண்ணெயில் குழைத்து  பேஸ்ட் செய்து, அதனை வயிற்றின் மேல் தடவி 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி 21 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தாலும் வாய்வுத் தொல்லையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.

தேங்காய்ப் பால்;
     
        தேங்காய் துருவலை சாப்பிடலாம் அல்லது தேங்காய் நீர் அல்லது தேங்காய் பாலை குடிப்பதால் வாய்வு தொல்லை குணமாகிறது. இவை ஜீரண உறுப்புகளை ஆசுவாசப்படுத்தி அமைதியாக்கி அமில உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.

மசாலா பொருட்கள்;
       
          சீரகம், ஏலக்காய், சோம்பு போன்றவை மிகச் சிறந்த நிவாரணிகளாகும். வாயுத் தொல்லை ஏற்பட்டவுடன் இதனை வெறும் வாயில் மென்றாலோ அல்லது நீரில் கொதிக்க வைத்து பருகினாலோ உடனே நல்ல பலன் கிடைக்கும். சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.

சீமை சாமந்தி டீ ;
    சீமை சாமந்தியை டீ   தயாரித்து குடித்தால், வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும். வந்தாலும் உடனடி நிவாரணம் தரும்.

வாழைப்பழம் வாய்வுத் தொல்லையை   கட்டுப்படுத்தும்;
     வாழைப்பழம் மிகச் சிறந்த பலனை தரும். வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் உடனடியாக வாழைப் பழம் சாப்பிட்டால் கட்டுப்படுத்திவிடும்.

பேரிக்காய் பழச்சாறு;
      ஜீரண சக்தியையும் தூண்ட தினமும் 1 டம்லா் பேரிக்காய் பழச்சாறு  குடித்தால் வாய்வுத் தொல்லை உண்டாகாது.

சுக்கு காபி ;
   
        சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

சோம்பு நீர்;
       
            வெறும் சோம்பை வாயில் போட்டு மென்றாலோ அல்லது சோம்பை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு குடித்தால், 10 நிமிடங்களில் வாய்வுத் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் தரும்.

இஞ்சி டீ;
     
       இஞ்சி கூட வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும். அதற்கு சிறு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது ஒரு நாளில் மூன்று வேளை இஞ்சி டீ போட்டு குடித்தாலோ, நல்ல மாற்றம் தெரியும்.

Comments