பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.

   
அன்னாசிப்பழம்;
          அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும், புதிய இரத்தம் உடலில் ஊறும், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை போக்கும், தீராத தாகம் தீர்க்கும், உடல் பளபளப்பாக மாறும் உடல் சுருக்கம் போக்கும். 


இலந்தைப் பழம்;
      உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது இலந்தைப்பழம். நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி அதிகம் இருப்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம் பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குறைக்கவும், அதிக உதிரப்போக்கை தடுக்கவும் இலந்தைப்பழத்தை மாதவிலக்குக் காலங்களில் சிாிது உண்டு வந்தால் நன்கு பயனளிக்கும்.   வயிற்றுப்போக்கு, சீதபேதி, மலச்சிக்கல், நீரிழிவு நோய்களை  போக்கும். 



கடுக்காய்;
        கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள புண்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது. மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை ஊக்கப்படுத்தும். பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் பல நோய்களைக் குணப்படுத்தகூடியது. கடுக்காய் பொடி செய்து பற்பொடியுடன் கலந்து பல் தேய்த்து வந்தால் ஈறுவலி, வீக்கம், இரத்தம் கசிவு ஆகியவை தீரும்.


செண்பகப்பூ;
          செண்பகப்பூவை கஷாயம் செய்து அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
செண்பகப் பூக்கள் தூக்கத்தைத் தரக்கூடியவை. மன உளைச்சலால் தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இந்த கஷாயம் அருந்தலாம். செண்பகப் பூ வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. கண் நோய்க்கும் இது ஓர் அற்புத மருந்தாகும்.செண்பகப் பூவை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் ஆண்மைக்குறைவு நீங்கும். 
கிராம்பு; 
       பல்வலி, பற் சொத்தை போன்றவற்றிற்கு கிராம்பு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது . கிராம்பை நீர்விட்டு அரைத்து நெற்றி, மூக்கு தொண்டை பகுதியில் பத்துபோட  ஜலதோஷம், மூக்கடைப்பு குணமாகும்.
       கிராம்பில் உள்ள மூலக்கூறுகள் கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது மேலும் கிராம்பு சீரண என்ஜைம்களை அதிகரித்து ஜீரண சக்தியை அதிகரிக்கும். வாய்வு, நெஞ்செரிச்சல், குமட்டல், போன்ற பிரச்சினைகளையும் சரிசெய்கிறது. நுரையீரல் புற்று நோயை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய கிராம்பு பயன்படுகிறது. 


நெல்லிக்காய்;
          நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது, குளிர்ச்சித் தன்மையானது கண்களுக்குக் குளிர்ச்சி தரும், செரிமானத்தைக் தூண்டும், சிறுநீர் பெருக்கும், வாயுவை போக்கும், உடல்சூடு, எலும்புருக்கி நோய், வாந்தி, வெள்ளை படுதல், ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். நெல்லிக்காய் சாறெடுத்து நல்லெண்ணெயை சம அளவு கலந்து தலையில் தேய்த்து ஒரு மனிதன் நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும். 
கேரட்;
      கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் அழிந்து போகும். பற்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். ஈறுகள் கெடாமல் இருக்கும். வாய் புண்கள் சரியாகும். தினமும்     இரண்டு கேரட் பச்சையாக சாப்பிட்டு வந்தால்  உடல் பளபளப்பாக மாறும், முகம் பொலிவு பெரும். இரத்தம் சுத்தமாகும். தேவையில்லாத நச்சுக்கள் வெளியேறும். பித்தம், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும் ஆற்றல் மிக்கது.
               

வல்லாரை இலை;
        வல்லாரை சிறுநீர் பெருக்கும், மாதவிலக்கைத் தூண்டும், வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றை வல்லாரை குணமாக்கும்.
        வல்லாரை இலை சூரணத்தை காலை, மாலை நேரத்தில் நெய்யில் சாப்பிட உடல் பொலிவு பெரும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனைத் திறன் அதிகரிக்க வல்லாரை இலை சாப்பிட வேண்டும். 
                   
                                                                 
வேப்பிலை;
              வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன. வேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிட்டு வந்தால், நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காணலாம்.வேப்பங் கொழுந்தை அரைத்து, அதனுடன் வெங்காயத்தை சேர்த்து மூன்று நாட்கள் மூன்று வேளையும் சாப்பிட மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தீரும். வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்படுபவர்களுக்கு, வேப்பிலை நல்ல நிவாரணத்தை வழங்கும்.
எலுமிச்சை;
              எலுமிச்சம் பழச்சாறு மற்றும் எலுமிச்சம் பழம் சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட தோல் வியாதிகள் அண்டாது, சிறுநீரக கற்கள் கரைய துவங்கும், கல்லீரல் வலுப்பெறும், பற்கள் ஆரோக்கியமாக இருக்கும், வாய் துர்நாற்றம் அகலும்,  
          நல்லெண்ணெயில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால் நீா்க்கடுப்பு எரிச்சல் குணமாகும்.

Comments