ஜலதோஷம், இருமலால், காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு தும்பை.!!



            தும்பைக்கு எல்லாவகை மண்ணிலும் செழித்து வளரும் தன்மை கொண்ட புல் வகை சார்ந்த சிறு தாவரமாகும். இந்த தும்பை செடியின் இலைகள், பூ, வேர் என்று அனைத்து பாகங்களும் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது.  தும்பை ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம் வரை வளரும்.
இலைகள் நீளமாகவும் இலைகளுக்கு மேலும் கீழும் சிறு சிறு பூக்கள் அமைந்திருக்கும்.
இதன் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் பாா்போம். 

       ஜலதோஷம், இருமலால் அவதிப்படுபவர்கள் தும்பைப்பூவை 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, ஆறியவுடன் 1 தே கரண்டி தேன் கலந்து குடித்தால் பிரச்னை சரியாகும். தும்பை இலைச்சாறு, தலைவலி, வாதநோய் போன்றவற்றைக் குணமாக்கும் சக்தி கொண்டது. தும்பை பூ, தாகம், காய்ச்சல், கண்ணோய் போன்றவற்றிற்கு மருந்தாகும். 
காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் காலகட்டத்தில் மட்டும் உணவில் உப்பு, புளி, அசைவ  உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. 

        தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் நிவாரணம் கிடைக்கும்.
 தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விசம் இறங்கும். தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.

       டைஃபாய்டு காய்ச்சல் வரும்போது கண்வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் பின்தொடர்ந்து வரும். அப்போது ஒரு கைப்பிடி அளவு தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய பருத்தி துணியால் நனைத்து நெற்றி மற்றும் கண்  இமையில் மேல் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன், கண்பார்வை தெளிவடையும். 

          தும்பை வேர், ஈர வெங்காயம் இரண்டையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும் தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்.

         தலைபாரம்,  உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் சிரிது  நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, இளஞ்சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

         தீராத தலைவலி உள்ளவர்கள் தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் உடனடித் தீர்வு கிடைக்கும்.
 தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு தீராத விக்கல் வரும்போது விழுங்க விக்கல் நீங்கும். 

           விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப்பூவையும், அதே அளவு தும்பை இலையையும் எடுத்து நசுக்கிச்சாறு எடுத்து, அதில் 4 ஸ்பூன் அளவு சாப்பிட ,விஷம் நீங்கும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும்.

சொறி, சிரங்கு உள்ளவர்கள் தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு அரைமணி நேரம் கழித்து சுடுநீரில்  குளித்து வந்தால் பிரச்னை தீரும்.

பாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறி மயக்கம் வந்துவிட்டால், முதலுதவியாக தும்பை இலைச்சாறை மூக்கில்விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்துவிடும். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கலாம்.
தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க விஷம் இறங்கும்.  

தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.

தும்பைப்பூவின் சாறு 1 ஸ்பூன்,  வேலிப்பருத்தி சாறு 2 ஸ்பூன், மிளகுத்தூள் 2 ஸ்பூன் , தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி எல்லாம் சரியாகும்.

தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும்.

ஒரு டம்ளர் காய்ச்சிய  பசும்பாலில் ஒரு கைப்பிடி அளவு பூக்களை இரவு நேரம் ஊற வைத்து காலையில் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுத்து வந்தால் தொண்டையில் கட்டியிருக்கும் கோழை அகலும். இலைச்சாறு 10 முதல் 15 மி.லி வரை குடித்து வந்தால்  அலர்ஜி நீங்கும். இதை 10 நாள்கள் தினமும் காலையில் குடித்து வர வேண்டியது அவசியம். 

Comments