வசம்பு..!!

                   வசம்பின் மருத்துவ குணம்;
                      

          வசம்பை தண்ணீரில் ஊற வைத்து துவையலாக அரைத்து தேனில் கலந்து தினமும் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி வராது.

       சிறிது வெந்தயத்துடன் வசம்பு போட்டு ஊற வைத்து விழுதாக அரைத்து சாப்பிட்டால் தோலில் இருக்கும் அலர்ச்சி குணமாகும். அல்லது மஞ்சளுடன் வசம்பு தேய்த்து குளித்தால் சரும நோய்கள் நீங்கி விடும்.

        வசம்பு சுக்கு மிளகு ஆகிய மூன்றையும் அரைத்து கஷாயம் செய்து குடித்தால் கை, கால், மூட்டு வலி நீங்கும்.மற்றும் செவ்வாழை பழத்துடன் சிறிது வசம்பு பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு இருக்கும் மாதவிடாய் பிரச்சனை தடுக்கலாம்.
         வசம்பு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் அணைத்து வகையான தொற்று நோய்கள் குணமாகும்.அல்லது வசம்புடன் நாட்டு வெல்லத்தை சேர்த்து காலை மாலை இரண்டு வேளை சாப்பிட்டால் விரைவில் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

        சீரகத்துடன் வசம்பை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் நீங்கும்.

Comments