புற்றுநோய்க்கு அருமருந்து..!!

             எள்ளின் மருத்துவ குணங்கள்;
                          

            புற்றுநோய்க்கு  எள் அருமருந்து.. தினமும் சாப்பிடுங்கள்.
எள்ளில் இருக்கும் மருத்துவ பலன்கள்  நமது உடலுக்கு முக்கிய பங்காற்றுகிறது.

              எள்ளை தினமும் பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயானது தடுக்கப்படுகிறது.
மேலும் ரத்த நாளத்தில் இருக்கும் புற்று நோய் செல்களை வளர விடாமல் பார்த்துக் கொள்கிறது. இதன் மூலமாக மார்பக புற்றுநோய் மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவை தடுக்கப்பட்டுகிறது , எள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் காரணமாக உடல் நலம் பாதுகாக்கப்படுகிறது.
          நமது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்திருக்கிறது. எள்ளில் கருப்பு நிற மற்றும் வெள்ளை நிறத்தில் எள் இருக்கிறது, இதில் கருப்பு நிறத்தில் இருக்கும் எள் தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. வெள்ளை நிற எள்ளை விட அதிகளவு ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் -B மற்றும் வைட்டமின் -A இருக்கிறது.

      இதன் மூலமாக ஞாபக மறதி போன்ற பிரச்சனை குறைகிறது,  கல்லீரலில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் போன்றவற்றை சுத்தம் செய்யப்படுகிறது, செரிமான கோளாறு உள்ளவர்களுக்கு இந்த எள்ளை தினமும் அரை தே.கரண்டி (table spoon) சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு பிரச்சனை நீங்கும். 

Comments