திராட்சையின் நன்மைகள்...!!!

திராட்சையின் நன்மைகள்:


           
               திராட்சைப்பழம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழம் ஆகும். இந்த பழத்தை தமிழில் கோடி முந்திரி என அழைப்பார்கள். இந்த பழத்தில் திராட்சை, பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, காஷ்மீர் திராட்சை, பன்னீர் திராட்சை மற்றும் விதையில்லா திராச்சை என பல வகைகள் உள்ளன.
 
 


திராட்சையின் நன்மைகள்:

       இந்த திராட்சை பழ சாற்றை தினமும் குடித்து வந்தால், பெண்களுக்கான மாதவிடாய் கால வலிகளை விரைவில் தீர்க்கலாம். பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும், வயிற்று புண் மற்றும் குடல் பிரச்சனைகளை சரி செய்யும். வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எட்டப்படும் குமட்டல்கள் மற்றும் வாந்தி எடுத்தால் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். திராட்சையை அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் போலிப்பாகும்.




யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:

திராட்சை பழம் சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்கி அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே இரவு நேரங்களில் இதை சாப்பிட கூடாது. அசிடிட்டி மற்றும் அல்சர் உள்ளவர்கள் இந்த பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது.

Comments