உடல் எடை குறைய உதவியாக இருக்கும் பொருள்கள்.(Substances that help you lose weight)


          தேவையற்ற கொழுப்பு நம் உடலில் அதிகம் சேருவதால் உடல் எடை அதிகரிக்கிறது. இதற்க்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கங்களே. தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்வது, உடலுக்கு வேலை கொடுக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவற்றாலும், அட்ரினல் சுரப்பு அதிகரிப்பது, தைராய்டு சுரப்பு குறைவது போன்றவற்றாலும் உடல் பருமன் அதிகரிக்கும். சிலருக்கு இது பரம்பரை வழியாகவும் வரும்.  உடல் எடை குறைய உதவியாக இருக்கும் பொருள்கள்..!! 
 என்ற தலைப்பில் மூலம் உடல் எடையை குறைக்க சில அற்புதமான குறிப்புகளை பார்ப்போம். 
 காளான்;
         உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
முட்டையின் வெள்ளைக்கரு;
         முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.
ஆப்பிள்;
        தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.
 பாகற்காய்;
         பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.
 காலிஃப்ளவர்;
          உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.
 பட்டை;
        பட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

 
பாதாம்;
       பாதாமில் மோனோ  அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
எலுமிச்சை சாறு;
           ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு அதோடு சம அளவு தேன் கலந்து ஒரு டம்ளர் வெந்நீரோடு குடித்து வந்தால் உடல் எடை குறையும். அதோடு உடலில் உள்ள தேவை இல்லாத கொழுப்பும் குறையும்.
 பெருஞ்சீரகம்;
           பெருஞ்சீரகத்தை நன்கு அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை என இரு வேலையும் ஒரு டம்ளர் தண்ணீரில் அரை ஸ்பூன் பெருஞ்சீரக பொடியை கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
மிளகாய்;
       அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
முள்ளங்கி;
        முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.
டார்க் சாக்லெட்;
      அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
 பச்சை பயறு;
       அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

Comments

  1. It is a very interesting and informative article, for more informative and simple habits
    Healthy Lifestyle Mentore

    ReplyDelete

Post a Comment