மூட்டு வலி குணமாக (Joint Pain)..!!
பொதுவாக மூட்டு வலி (joint pain ) என்பது வயதானவர்களுக்கு தான் அதிகமாக மூட்டு வலி பிரச்சனைகள் வரும். மூட்டு வலிக்கு பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம். குறிப்பாக நாம் உண்ணும் அதிக மசாலா உணவுகள், துரித உணவுகள் தசைகளில் அதிக வறட்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் மூட்டுகளைப் பாதுகாக்கும் சுற்றியுள்ள தசை நார்கள் வலுவிழந்து இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து வீக்கமடைந்து வலியை உண்டாக்குகிறது. சில எளிய குறிப்புகள்; ஒரு டீஷ்பூன் கறுப்பு எள்ளை ஒரு டம்பளர் தண்ணீரில் இரவு ஊறவைத்து பின் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும். மூட்டு வலி உடனடியாக குறைய தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து பின் வெதுவெதுப்பான சூட்டில் வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்தால் உடனே வலி குறையும். ...