முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!

                                     முட்டை;            
               முட்டை ஏராளமான சத்துகளை கொண்ட உணவு மட்டுமல்ல, அத்தியாவசியமான, வைட்டமின் B-12 நிறைந்திருக்கும் ஒரு உணவும் கூட. ஆனாலும், தினசரி ஒரு முட்டையை சாப்பிடுவது, போதுமான B-12 ஐத் தராமல் போகலாம், வைட்டமின் அதிகம் உள்ள மற்ற உணவுகளைச் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் போதுமான வைட்டமின் B-12 ஐ நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

             அதேபோல, முட்டையின் மஞ்சள் கருக்களில் வெள்ளை பகுதியை  விடவும்  அதிக  வைட்டமின்  B-12 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, மேலும் உடலால் எளிதில் உட்கிரகிக்கப்படுவதாகவும் உள்ளன. அதனால்தான் முட்டையின் வெள்ளைக் கருக்களை மட்டும் சாப்பிடுவதை விட முழு முட்டையை சாப்பிடுவது நல்லது.
                       

புரதச்சத்து;

          ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் 6 கிராம் இருக்கிறது.
வைட்டமின் டி: இதன் மஞ்சள் கருவில் வைட்டமின்-D உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.
         சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

கண் ஆரோக்கியம்;

முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும். 

கர்ப்பிணிகளுக்கு;

      பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது  கிடைக்கிறது,  ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும், மூளையைக் கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.

மார்பக புற்றுநோய் தடுப்பு;

         முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாயப்புகளை குறைக்க முடியும். இது மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சனைகளையும் துரத்தியடிக்கும் முட்டையை உணவின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Comments