கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும் சீத்தாப்பழம்..!!
சீத்தாப்பழம்;
சீத்தாப்பழம் குடல் புண்களை குணப்படுத்தவும், அமிலத்தன்மையைத் தடுக்கவும் உதவும். பழத்திலிருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை மென்மையாக்கி, நிறத்தைக் கூட்ட உதவும். கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சீத்தாப்பழத்தில் உள்ள இரும்புச் சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். “சீத்தாப்பழத்தில் பயோஆக்டிவ் மூலக்கூறுகள் உள்ளன. அவை உடல் பருமனையும், நீரிழிவு மற்றும் புற்றுநோயையும் எதிர்க்கும் பண்புகள் உள்ளன”
ஆரம்ப நிலை காசநோயைக் குணப்படுத்தும் சக்தி சீதாப்பழத்திற்கு உண்டு. மத்திமநிலை காச நோய் உள்ளவர்கள், இப்பழத்தைத் தின்று வர, நோய் கட்டுக்குள் இருக்கச் செய்யும்.
சீதாப்பழச்சாறு குடித்தால், கோடையில் ஏற்படும் கொடும் தாகம் தணியும். உடல் குளிர்ச்சி பெறும்.
தொடர் வாந்தி, குமட்டல் ஏற்பட்டால் ஒரு சீதாப்பழத்தை மென்று தின்றால் உடனே வாந்தி, குமட்டல் நிற்கும்.
அறுவை சிகிச்சைக்குப் பின் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள இரணங்கள் விரைவில் ஆறும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் மாய்ந்து விடும்.
சிசுவின் மூளை, நரம்பியல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சீத்தாப்பழம் உதவுகிறது. கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவுகிறது.
கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்லதாகும். அதே போல் பிரசவத்திற்கு பின்பு உடல் எடையை குறைக்கவும் இது உதவும். முக்கியமாக, காலையில் ஏற்படும் குமட்டலை இது நீக்கும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், உணர்வின்மை, பசி, மனநிலையில் ஏற்ற இறக்கம் போன்றவைகளுக்கு எதிராக போராடும்.
சீத்தாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளதால், அது உடலில் உள்ள நீரின் அளவை சரிசமமாக்கும். இது சீத்தாப்பழத்தின் முக்கியமான உடல்நல பயனாகும். இதன் காரணமாக மூட்டில் இருக்கும் அமிலங்கள் வெளியேற்றப்படும். இதனால் கீல்வாதம் வராமல் தடுக்கப்படும்.
இரவில் ஒரு சீதாப்பழம் சாப்பிட்டுப் பாருங்கள், நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். இதற்குக் காரணம் இப்பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் தாதுப் பொருட்கள்தான். இவை இரண்டிற்குமே மன அழுத்தத்தை சரிப்படுத்தும் குணம் உண்டு. அதோடு இந்த தாதுப் பொருட்கள், நம் உடலிலுள்ள எலும்புகளுக்கும், தசைகளுக்கும், இருதயத்திற்கும் வலுவளிக்கக் கூடியவை.
Comments
Post a Comment