பழச்சாறு நன்மைகள்..!!

பேரிக்காய் பழச்சாறு;
                 


           பேரிக்காய் வயிற்றுக்கு மிகவும் நல்லது செய்யும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. இதில் பல்வேறு வகையான வைட்டமின்களும் உள்ளன. குழந்தைகளுக்கும் திராட்சை பழச்சாறு போல இதனையும் கொடுக்கலாம். இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும். பழச்சாறாகக் குடிக்க பிடிக்கவில்லை என்றால் அப்படியே கூட சாப்பிடலாம்.
           பழச்சாறுகளை மாலை வேளையில் குடிப்பதை  விட மதிய உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக குடிக்கலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கலாம். ஐஸ் கட்டிகளையும் சேர்க்க கூடாது. ஏனென்றால் அதன்மூலம் ஒருவகையான கேஸ் உண்டாகி மலச்சிக்கலை மேலும் அதிகரிக்கும். குளிர்ந்த நீர் அல்லது சாதாரண நீரில் பழச்சாறு செய்யலாம். மலச்சிக்கலுக்கு பால் கொண்டும் பழச்சாறு செய்யக்கூடாது.

ஆரஞ்சு பழச்சாறு;
                             


            நார்ச்சத்து நிறைந்த ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் சுலபமாக மலச்சிக்கல் சரியாகிவிடும். சிட்ரிக் பழமான இதில் நரின்ஜெனின்(Naringenin) உள்ளதால், உடனடியாக மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். கிட்டத்தட்ட எலுமிச்சை பழத்தை போன்றதுதான் என்றாலும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து அடங்கியுள்ளது.
திராட்சை பழச்சாறு
              3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் நாட்டு மருத்துவத்தில் பன்னீர் திராட்சையை சாறு எடுத்து கொடுக்கச் சொல்வார்கள். இதில் உள்ள சத்துக்கள் உணவை எளிதில் ஜீரணம் செய்ய உதவுவதுடன், மலச்சிக்கலால் ஏற்படும் வலியையும் குறைக்கும். வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்த இந்த பழம் உடலுக்கும் நல்லது. 

அன்னாசி பழச்சாறு;
                        

             அன்னாசி பழத்தில் புரோமிலேன்(Bromelain) என்னும் மூலப்பொருள் இருக்கிறது. இது வயிறு உப்புசத்தையும், மலச்சிக்கலையும் சரி செய்யும் தன்மை கொண்டது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் அன்னாசி உதவும். மதிய உணவிற்கு முன் இதை குடிக்கலாம்.

எலுமிச்சை பழச்சாறு;
                      

           எலுமிச்சை பழச்சாறு மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தரும். எலுமிச்சையில் உள்ள அசிடிட்டி, வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் குடலையும் சுத்தம் செய்யும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் லெமன் ஜூஸ் குடிக்க முக்கிய காரணம் இதுதான். நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்வதால் எடையும் வேகமாக குறையும். உணவு ஆலோசகர்கள் பலரும் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறை குடிக்க சொல்வதற்கான காரணமும் இதுதான். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் குடித்தால் இன்னும் நன்று.

Comments