புதினா கீரையின் மருத்துவ பயன்கள்..!!

                              புதினா;
                              
             புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்துவீா்.

     வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புபீசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும்.

               புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன. சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.


           அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் செரிமானமாக்குகிறது. இரத்தம் சுத்தமாகும்.

          வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

         புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.

           மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.


மருத்துவ பயன்கள் ;



1).     வாயுப் பொருமல், வாய்த் தொல்லை, நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை விலகும்.

2).     உடல் தொப்பை, பருமன் குறைகிறது.

3).    அழிந்த திசுக்கள் புதுப்பிக்கப்படும். காலரா அண்டாது.

3).    சளி, இருமல், மூக்கடைப்பு, ஆஸ்துமாவால் அவதியுறும் அன்பர்கள் உடனடி நிவாரணம் பெறுகின்றனர்.

4).   தோல் பிணிகள், முகப்பரு நீங்கி முகம் பொலிவைப் பெறுகின்றது.


5).    மலக்கட்டு விலகி ஜீரணம் மேம்பட்டு பசியைத் தூண்டும் அற்புத மருந்துச்சாறு.

 6).    உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும். 

         வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும். 

           புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும். வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். 

            புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும். அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும். இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். 

         புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும். மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். 

        மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. 

       டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. 

        பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். 

           பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்

Comments