மூட்டு வலி குணமாக (Joint Pain)..!!



         பொதுவாக மூட்டு வலி (joint pain ) என்பது வயதானவர்களுக்கு தான் அதிகமாக மூட்டு வலி பிரச்சனைகள் வரும். 
மூட்டு வலிக்கு பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம்.
      குறிப்பாக நாம் உண்ணும் அதிக மசாலா உணவுகள், துரித உணவுகள் தசைகளில் அதிக வறட்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் மூட்டுகளைப் பாதுகாக்கும் சுற்றியுள்ள தசை நார்கள் வலுவிழந்து இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எலும்புகள் ஒன்றோடொன்று உராய்ந்து வீக்கமடைந்து வலியை உண்டாக்குகிறது.

 சில எளிய குறிப்புகள்;
        ஒரு டீஷ்பூன்  கறுப்பு எள்ளை ஒரு டம்பளர் தண்ணீரில் இரவு  ஊறவைத்து பின் அதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டு வலி குறையும்.

        மூட்டு வலி உடனடியாக குறைய தேங்காய் எண்ணெயை காய்ச்சி அதில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து பின் வெதுவெதுப்பான சூட்டில் வலி இருக்கும் இடத்தில் நன்கு தேய்த்தால் உடனே வலி குறையும்.

         வேப்பம் பூ, மற்றும் வாகைப் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு அதை உலர்த்தி பின் பொடி செய்து அரை ஸ்பூன் உண்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

          உருளைக்கிழங்கை நன்கு சிறிய அளவில் வெட்டி ஒரு டம்ளர்  குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும். 

         தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.

       வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயில் கொஞ்சம் கற்பூரத்தை போட்டு மிதமான சூட்டில் மூட்டு வலி  உள்ள இடத்தில் போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

        அவுரி இலை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூட்டு வாதம், மூட்டு வீக்கம் குணமாகும்.

       சுக்கை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலையில் அந்த நீரை குடிக்க வேண்டும். அல்லது சுடு நீரில் இஞ்சியைதட்டிப் போட்டு ஆறிய பின் குடிக்கலாம். 

        தினமும்  காலையில் மோர் குடிப்பதால் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கலாம். இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கும். 

        மூட்டுவலி தீர்க்கும் கசப்பு காய்கள் :
பாவற்காய், சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள் மூட்டு வலியே போக்குபவை. அவற்றை தினமும் அல்லது வாரம் 4 நாட்களாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.

          கார்போஹைட்ரேட் உணவுகள் :
கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

முடக்கத்தான் கீரை;
        முருங்கைக் கீரையும் முடக்கத்தான் கீரையும் தினமும் அல்லது வாரத்தில் 4 நாட்கள் தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் மூட்டு வலியிலிருந்தும், வாத நோய்களிலுருந்தும் உங்களை நிரந்தரமான காப்பாற்றிக் கொள்ளலாம்.

பால் உணவுகள்;
     பால், தயிர், பன்னீர், சீஸ் போன்ற உணவுப் பொருகளை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். இவை மூட்டு இணைப்புகளில் இருக்கும் வலியைப் போக்குகிறது.
மீன்;
       பருப்பு, மீன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை கட்டாயம் தினமும் சேர்க்க வேண்டும். புரத உணவுகள் தசை நார்களை வலுப்படுத்துகிறது. கொள்ளுப் பயிறை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் உடல் பருமனால் வரும் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.
பாசிப்பருப்பு சூப்;
       பாசிப்பருப்பை பூண்டு சேர்த்து வேக வைத்து சூப்பாக செய்து அதில் மிளகு தூவி குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது வலியைப் போக்குகிறது. வாத சம்பனத பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.
உணவில் சேர்க்க வேண்டிய பொருட்கள் :
போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தினமும் உணவு சமைக்க வேண்டும். பால், சாதம், மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.

Comments

  1. With the expanding furor of intermittent fasting, it is getting one of the simplest and most brief eating routine intends to return to a sound way of life.

    ReplyDelete

Post a Comment