நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்ய..!!
எலுமிச்சை;
நச்சுக்களை நீக்கும் புகழ் பெற்ற மற்றும் சிறப்பான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது எலுமிச்சை. எலுமிச்சையில் வைட்டமின் சி என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் அடங்கியுள்ளதால், அது உங்கள் சருமத்திற்கு பல மாயங்களை நிகழ்த்தும். அதேப்போல் இயக்க உறுப்புகளை உருவாக்கும் நோய்களுக்கு எதிராக போராடும்.
எலுமிச்சையால் உங்கள் உடலில் அல்கலைன் தாக்கமும் ஏற்படும். இதனால் உங்கள் உடலின் அமிலகாரச் சமன்பாடு மீட்கப்படும்.
இதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு மேம்படும். கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கப்பட்ட வெந்நீரை குடித்து உங்கள் நாளை தொடங்குங்கள். இதனால் உங்கள் உடலில் இருந்து நச்சுப்பொருட்கள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
எலுமிச்சை பழச்சாறு மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை தரும். எலுமிச்சையில் உள்ள அசிடிட்டி, வைட்டமின் சி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் குடலையும் சுத்தம் செய்யும். உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் லெமன் ஜூஸ் குடிக்க முக்கிய காரணம் இதுதான். நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்வதால் எடையும் வேகமாக குறையும். உணவு ஆலோசகர்கள் பலரும் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறை குடிக்க சொல்வதற்கான காரணமும் இதுதான். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்க வேண்டும். வெதுவெதுப்பான நீரில் குடித்தால் இன்னும் நன்று.
தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.
செரிமானம்;
செரிமானக் கோளாறு உள்ளவர்கள், தண்ணீரில் எலுமிச்சைப் பழச்சாற்றைப் பிழிந்து பருகினால் செரிமானப் பிரச்னை குணமாகும்.
குடலை சுத்தம் செய்கிறது;
எலுமிச்சைப் பழச்சாற்றைப் குடிப்பதனால் உங்கள் குடல் பாதையில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
சமையலறைக் கிருமிகள்;
உங்களது சமையலறைப் பாத்திரங்கள் அல்லது காய்கறி நறுக்கும் பலகைகளை உபயோகப்படுத்தியப் பின்பு எலுமிச்சை சாருப் பயன்படுத்திக் கழுவி வைத்தால் கிருமிகள் அண்டாது இருக்கும்.
பூண்டு;
பூண்டு இதயத்திற்கு நல்லது என அறியப்பட்டாலும், அது நச்சுப் பண்பை நீக்கும் உணவாகவும் செயல்படுகிறது. அதற்கு காரணம் அதிலுள்ள நச்சுயிர் எதிர்ப்பி, பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்களே.
பூண்டில் அல்லிசின் என்ற ரசாயனம் உள்ளது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி நச்சு பொருட்களுக்கு எதிராக போரிடும். கொஞ்சம் பூண்டை நசுக்கி, உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
க்ரீன் டீ;
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கு உள்ள சிறந்த வழிகளில் மற்றொன்று - உங்கள் உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொள்வது.
இது உங்கள் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உங்கள் கல்லீரலை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உட்பட அனைத்து நோய்களில் இருந்து பாதுகாக்கவும் இது உதவிடும்.
பீட்ரூட்;
பீட்ரூட்டில் மெக்னீசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பலவித உடல்நல பயன்களை அளிக்கிறது. இந்த சூப்பர் உணவு கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மேலும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம். பீட்ரூட்டை ஜூஸ் போட்டும் கூட குடிக்கலாம்.
கைக்குத்தல் அரிசி;
நச்சுத் தன்மையை நீக்க உதவிடும் வைட்டமின் பி, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் கைக்குத்தல் அரிசியில் வளமையாக உள்ளது.
மேலும் இதில் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. இது உங்கள் பெருங்குடலை சுத்தப்படுத்த பெரிதும் உதவும். இதில் செலினியம் வளமையாக உள்ளதால் உங்கள்க கல்லீரல் பாதுகாக்கப்பட்டு உங்கள் மேனியின் நிறம் மேம்படும்.
எலுமிச்சை சீக்கிரம் கேட்டுப் போகாமல் இருக்க;
கண்ணாடிப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் எலுமிச்சைப் பழங்களை போட்டு வைத்தால்,எலுமிச்சைப் பழம் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

Comments
Post a Comment