நெஞ்சு எரிச்சல் தீர மற்றும் தவிர்க்கும் முறைகள்.(Methods of avoiding chest irritation)




        நம்மில் பலருக்கு நெஞ்சு எரிச்சல் தீராத உபாதையாக இருந்து வருகிறது. அதிலிருந்து  விடுபட இயற்கையாகவே மருந்து மாத்திரை இல்லாத பல எளிய இயற்கையான வழிகள் உள்ளன. அவற்றை நாம் கடைப்பிடித்தால் இப்பிரச்சனையிலிருந்து விடுபடலாம். 

         பெரும்பாலானோர் நெஞ்சு எரிச்சலுக்காக அடிக்கடி  Anti Acid மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். உண்மையில் வயிற்றில் சுரக்கும் அமிலம் ஜீரணத்திற்கும், குடலில் என்ஜைம்கள் உருவாவதற்கும் தான் உதவுகிறது. எனவே, Anti Acid மாத்திரைகள் இதற்கு நிரந்தர தீர்வை தர முடியாது.

நெஞ்செரிச்சலுக்கான காரணம்:

 அதிக  உணவு;
        வயிற்றின் அதிக அளவு உணவு இருப்பதே இந்த அஜீரணப் பிரச்சனை நெஞ்சு எரிச்சலுக்கு முக்கிய காரணம்,.காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையே 4-5 மணி நேர இடைவெளியும், மதிய உணவுக்கும் சிற்றுண்டிக்கும் இடையே 3-4 மணி நேர இடைவெளியும், சிற்றுண்டிக்கும் இரவு உணவுக்கும் இடையே 3-4 மணி நேர இடைவெளியும் அவசியம். 

இறுக்கமான உடை;
          இறுக்கமான உடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகளை அணிவதால் வயிற்றின் இயற்கையான ஜீரண சக்தி பாதிக்கப்பட்டு நெஞ்சு எரிச்சலுக்கு காரணமாகிறது. 

மசாலா உணவு;
         மசாலா உணவுகளை அடிக்கடி உண்பதைத் தவிர்க்க வேண்டும். மிளகு, ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனை திரவியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி உண்ணும் போது ஜீரண மண்டலம் பாதிப்பு அடைந்து நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. 
          
சிகரெட்;
        புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனை ஏற்படும் போது, அப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும். சிகரெட்டில் உள்ள நிகோடின் தொண்டை, உணவுக்குழாய் போன்றவற்றை பலம் இழக்கச் செய்து, உணவு ஜீரணம் முழுமை அடையாமல் போவாதால் நெஞ்சு எரிச்சல் உண்டாகிறது.

      வலிக்கான மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது `அசிடிடி’ உருவாகக் காரணமாகலாம்.

      மன உளைச்சல் உடையோருக்கு அசிடிடி அதிகம் இருக்கும்.

      பெப்பர்மென்ட் போன்ற உணவு அசிடிடியை உருவாக்கலாம்.

        அதிக எடை அசிடிடி உருவாக்கும்.
அசிடிடிக்கு மரபணு ஒரு காரணம்.

நெஞ்சு எரிச்சலிருந்து விடுபட;
தர்பூசணி;
        நெஞ்செரிச்சலாக இருக்கும் நேரத்தில் ஒரு தர்பூசணியை நறுக்கி, அதில் நான்கு அல்லது ஐந்து சிறு துண்டுகளைச் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கிவிடும்.

துளசி;
        நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், வாயு தொல்லை போன்றவற்றிற்கு துளசி நல்ல மருந்தாகும். இந்த பிரச்சனைகள் வந்தால், துளசி இலை சாறை அருந்தினால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

சோம்பு;
        சோம்பு ஜீரண சக்தி கொண்டது. இதை நாம் நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, வாயில் மென்று, தின்னு வந்தால், உடனே சரியாகும்.
ஜீரண சக்தியை தூண்டுவதில் பட்டைக்கு முக்கிய பங்கு உண்டு. பட்டை பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால், வயிற்று எரிச்சல் அடங்கும்.

மோர்;
           மோர் மிகவும் குளிர்ச்சியான பானம். மோரில், சிறு துண்டு இஞ்சி, மற்றும் கருவேப்பில்லையை அரைத்து குடித்து வந்தால், வயிற்றுக்கு இதம் அளிக்கும்.

தவிர்க்கும் முறைகள்;

1.    இரவில் அதிக நேரம் கழித்து உணவு உண்பதனை தவிர்த்து விட வேண்டும்.

2.     சர்க்கரை இல்லாத `சூயிங்கம்மினை’ 30 நிமிடங்கள் மெல்ல அசிடிடி நீங்கும் என ஆய்வு கூறுகின்றது.

3.      பேக்கிங் சோடா’ அதனை அரை டீஸ்பூன் ஒரு கிளாஸ் நீரில் கலந்து உட்கொள்ள அசிடிடி குறையும். ஆனால், இதனை அடிக்கடி செய்யக்கூடாது. இதில் உப்பு அதிகம் என்பதால் வீக்கமும், வயிற்றுப் பிரட்டலும் ஏற்படக்கூடும்.

4.      சோற்றுக்கற்றாழை ஜுஸ் மிகச்சிறந்த நிவாரணி.

5.      அதிக கொழுப்புச்சத்து, எண்ணெய், மசாலா உணவைத் தவிர்த்து ஓட்ஸ், வாழைப்பழம் என உணவுப் பழக்கத்தினை மாற்றுங்கள்.


6.     தினமும் 4 கிராம் இஞ்சி (அ) 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Comments