இளநரையை தடுக்க வழிகள்..!!


           வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாள்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.இரும்புச் சத்துள்ள உணவுகளான கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, மீன் போன்றவற்றைச் சரிவிகிதமாக சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டு வந்தால் நரைமுடியை 10 சதவீதம் தவிர்க்க முடியும். பி காம்ப்ளக்ஸ், கால்சியம், இரும்புச்சத்து, புரதச் சத்துள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

      நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும்.  மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும். 

     கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

       கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

     வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ணவேண்டும். இதனால் இளநரை மாறும்.

        தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும். ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.


பீட்ரூட் சாறு;

           பீரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து அதன் சாறை பிழிந்து வைக்கவும். எண்ணெய் படியாத கூந்தலில் அடிப்பகுதியிலிருந்து வேர்ப்பகுதி நுனிப்பகுதிவரை சாறை நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.
வாரம் மூன்று முறை செய்துவந்தால் ஒரே மாதத்தில் இளநரை சிவந்து வருவதை பார்க்கலாம். நாளடைவில் இவை கருமையாக மாறத்தொடங்கும். காலையில் அலுவலகத்துக்கு செல்லும் போது கூட பீட்ரூட் சாறை கூந் தலின் மீது பூசி செல்லலாம். இவை பிசுக்கை உண்டாக்காது. 

இளநரை சிவப்பாக;

          மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

      நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.


       அதிகரிக்கும் இளநரையை உடனே போக்க மருதாணி கைகொடுக்கும். ஆனால் மிக மிக பக்குவமாக பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் கூந்தலில் சிவப்பு குடிகொள்ளும். மருதாணியுடன் கறிவேப்பிலை சமமாக எடுத்து அரைத்து இளநரை உள்ள பகுதிகளில் மட்டும் மிக பொறுமையாக ( அடுத்தவரை வைத்து) முடியில் பரப்பி சரியாக பத்து நிமிடத்தில் கூந்தலை அலசி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நாளடைவில் இளநரையைத் தேடுவீர்கள்.
மேற்கண்ட குறிப்புகள் நிச்சயம் இளநரையிலிருந்து உங்களை விடுபட வைக்கும்.


வீட்டிலே கிடைக்க கூடிய மிக எளிமையான குறிப்பு;

         முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். பிறகு எழும்பிச்சை பாதி எடுத்து கொள்ளுங்கள். நெல்லி பொடி அரை ஸ்பூன். இப்பொழுது இதை எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.

        முதலில் ஒரு பௌல் எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றவேண்டும். பிறகு எழும்பிச்சை பாதி பிழிந்துவிடவேண்டும். பிறகு நெல்லிப்பொடியை போட்டு நன்கு கலக்கவேண்டும். இப்பொழுது பேஸ்ட் போல் கிடைக்கும். அதை வாரம் இரண்டு முறை தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து தலைகுளிக்கவேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நரைமுடி கருமையாக மாறும். மேலும் நரைமுடி எப்பொழுதும் வராது.

Comments