குடல் புழுக்களை அழிப்பதோடு அவற்றை மீண்டும் உற்பத்தியாகாமலும் தடுக்க..!!

                             குடல் புழுக்கள் ;
                       
         குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது, மேலும் குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும்.  நம்முடைய வயிற்றுக்குள் பலவகையான குடல் புழுக்கள் வசிக்கின்றன. நாம் உண்ணும் உணவின் வழியாக உடலுக்குள் நுழைந்து அங்கேயே ஒட்டுண்ணியாக வாழும் இந்தப் புழுக்களால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைகிறது. பெரியவர்களைவிடவும் 6 வயதுக்குட்பட்ட வளரும் குழந்தைகள் உடலில் இந்தப் புழுக்கள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பூச்சி நீக்க மருந்து கொடுத்து அவற்றை அழிக்க வேண்டியது அவசியம். இது இல்லாமல் உணவு மூலமாகவே வயிற்றில் உள்ள புழுக்களை அழிப்பதோடு அவற்றை மீண்டும் உற்பத்தியாகாமலும் தடுக்க இயலும்.



          பாவக்காய் கோடியிலுள்ள இலைகளை 50 மில்லி சாறு வருமளவிற்கு பறித்து மிக்சியில் போட்டு அரைத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள கீரிபூச்சி, குடல் புழுக்கள் மற்றும் இதர கிருமிகள் இறந்து வெளியேறிவிடும். இதனால் உங்கள் குழந்தைகள் நன்றாக பசியெடுத்து சாப்பிடுவார்கள், சாப்பிட்ட உணவிலுள்ள சத்துக்களும் வீணாகாமல் குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்.

குடல் புழுக்களை அழிக்க உதவும் வேறு சில வழிகள்;


        சிவப்பு வெங்காயத்துடன் ஒரு பல் பூண்டு மற்றும் அவகாடோவுடன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொண்டு தினமும் பருகி வந்தால் குடல் புழுக்களைப் போக்குவதில் நல்ல பலன் கிடைக்கும்.

சிவப்பு வெங்காயம் மற்றும் பாலுடன் பெப்பர்மின்ட் சேர்த்து தயாரிக்கும் ஒரு கலவை குடல் புழுக்களைப் போக்க ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது ஒரு இயற்கை குடல் புழு நீக்க மருந்தாகும்.

             பப்பாளிக் காயை துருவி சாறு எடுத்து, 1 டேபிள் ஸ்பூன் சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் நீர் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 2 மணிநேரம் கழித்து, 250 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்தால், விரைவில் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.  

          பப்பாளி விதைகள் குடல் புழுக்களை அழிப்பதில் முக்கியப் பங்காற்றுபவை. இவற்றை வெயிலில் உலர்த்தி, நன்கு பொடி செய்துகொள்ள வேண்டும். இதனை பெரியவர்களாய் இருந்தால் ஒரு ஸ்பூனும் குழந்தைகள் அரை ஸ்பூனும் சாப்பிட வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.


        தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுவதன் மூலம், புழுக்களில் இருந்து விடுபடலாம். மேலும் பூண்டில் ஆன்டி-பாராசிடிக் பண்புகள் உடலில் உள்ள அனைத்து விதமான குடல் புழுக்களையும் அழிக்க உதவும்.

         பூசணி விதைகள் நாடா புழுக்கள் மற்றும் உருளைப்புழுக்களை அழிக்க உதவும். பூசணி விதைகளை பொடி செய்து ஜூஸ் உடன் கலந்து உட்கொண்டு சில மணிநேரங்கள் கழித்து, பாலில் சில துளிகள் விளக்கெண்ணெய் கலந்து குடியுங்கள். இதனால் குடல் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.


          ஓம விதைகளில் தைமோல் ஏராளமாக உள்ளதால்இது வயிற்றில் வளரும் புழுக்களின் வளர்ச்சியைத் தடுத்து வெளியேற்றும். மேலும் வயிற்று புழுக்களை அழிக்க ஓம விதைகளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.



        தினமும் காலை உணவின் போது 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். தேங்காய் சாப்பிட்ட 3 மணிநேரத்திற்கு பின், 375 மிலி பாலில் 30 மிலி விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடியுங்கள். அரைத்த தேங்காய்ச்சாறு, தேங்காய் தண்ணீர், இளநீர் ஆகியவையும் புழுக்களைக் கட்டுப்படுத்தும்

1).      தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று கேரட் சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிவதோடு, மீண்டும் உருவாகாமலும் தவிர்க்கப்படும்.

2).     தினமும் காலையில் ஒரு டம்ளர் புதினா சாற்றில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து குடித்துவந்தாலும் புழுக்கள் அழியும்.

3).    மாதுளை இலைகளை நன்கு கொழுந்தாகப் பறித்து அப்படியே மெல்லலாம். மாதுளம் பழச்சாற்றுக்கும் புழுக்கள் கட்டுப்படும்.


4).  வயிற்றில் புழு குடையும்போது ஒரே ஒரு கிராம்பை வாயில் இட்டு மென்றால் புழு மட்டும் அல்ல, அதன் முட்டையும் சேர்ந்தே அழிந்துபோகும்.


5).    தயிர், மோர் ஆகியவற்றில் புரோபயாடிக் சத்துகள் உள்ளன. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலை சிறப்பாகப் பராமரித்து குடல் புழுக்கள் உருவாவதைத் தடுக்கின்றன. எனவே, தினசரி உணவில் தயிர், மோர் சேர்த்து வந்தால் குடல் புழுக்கள் அண்டாது.


      சேப்பங்கிழங்கு சாப்பிடுவது வயிற்றுப்பூச்சித் தொல்லையைப் போக்கும். கொலஸ்ட்ரால் பிரச்னைக்கும் ரத்த அழுத்தக் கோளாறுகளுக்கும் சேப்பங்கிழங்கை மருந்தாகப் பயன்படுத்தலாம். பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடக் கூடியது. 

Comments