முடி கொட்டும் பிரச்சனையைப் போக்க , தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்க, வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாகும் விளாம்பழம்..!!




             விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச் செய்கிறது.
      விளாம்பழத்துடன் பனங்கற்கண்டைக் கலந்து சாப்பிட, பித்தக் கோளாறுகளால் ஏற்படும் வாந்தி, தலைச் சுற்றல் நீங்கும்.
தினமும் குழந்தைகளுக்கு விளாம்பழத்தைக் கொடுத்துவர நினைவாற்றல் அதிகரிக்கும்.

       பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும்.

      இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் 'மாஸ்க்' போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.

         தயிருடன் விளாம் காயை பச்சடி போல் செய்து சாப்பிட வாய்ப் புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழமான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த விருத்தியும் செய்கிற சிறப்பை உடையது. வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர.. நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

வறட்டு இருமல், வாய் கசப்பு குணமாக விளா மரத்தின் மரப் பட்டையைப் பொடியாக்கி கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம்.

         விளாம்பழத்தின் சதைப்பகுதியைத் தனியே எடுத்துக் காய வைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சம அளவு கஸ்தூரி மஞ்சள், பார்லி, பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை எடுத்து அரைத்து, சோப்புக்கு பதிலாக குளிக்கும்போது இதைப் பயன்படுத்தலாம். இதனால் தோல் மிருதுவாவதுடன் கரும்புள்ளிகள் மறையும்.
நரம்புத் தளர்ச்சி குணமாக விளாம்பழத்தை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.

         தயிருடன் விலாங்காயை சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாகும்.
தினந்தோறும் ஒரு விளாம்பழம் என 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் சரியாகும் மற்றும் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

         முடி கொட்டும் பிரச்சனையைப் போக்க 10கிராம் விளா மரத்தின் இலை, 50 கிராம் சுருள் பட்டை, 3 டீஸ்பூன் வெந்தயம், 5 கிராம் வெட்டிவேர் ஆகியவற்றை 200 மி. லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு 10 நாட்கள் தொடர்ந்து வெயிலில் வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தைலத்துடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து தினந்தோறும் தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் அடி முடி வரை படும்படி தடவி வந்தால் முடி கொட்டுவது நிற்பதுடன், கருகருவென வளர தொடங்கும்.

          தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்க, விளா மரத்தின் இலை, 10. செம்பருத்தி இலை, 10 கொட்டை நீக்கிய பூந்தித் தோல் 5 ஆகியவற்றை எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, நன்றாக அரைத்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்க வேண்டும். இதேபோல் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

Comments