தலைமுடி உதிர்வதை நிறுத்தி தலைமுடி கருமையாக நன்கு வளர குறிப்புகள்.!!




           முடி கொட்டுவது என்பது இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரும் கவலை அளிக்கும் விசயமாக உள்ளது. கெமிக்கல் எண்ணெய்களை தலையில் தேய்ப்பதாலும், தலைமுடியயை சரியாக பராமரிக்காமல் பொடுகை வர விடுவதாலும் பெரும்பாலானோருக்கு முடி கொட்டுகிறது. இது தவிர மன அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கொட்டிய தலை முடி மீண்டும் வளர, முடி கொட்டாமல் இருக்க சில குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்

      நம் சமையலறையில் பயன்படுத்தும் கறிவேப்பிலை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கிறது. கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால் முடி வளர்ச்சி அதிகமாகும். 

கறிவேப்பிலை;

       கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது இதனால் இறந்துபோன தலைசரும தண்டை நீக்கவும்,பொடுகை தடுக்கவும் இது உதவுகிறது. கறிவேப்பிலை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை பார்க்கலாம்.

      கறிவேப்பிலைபொடி அல்லது கறிவேப்பிலையை அரைத்து தயிர் கலந்து அரை மணி நேரம் கழித்து தலை குளித்தால் தலைமுடி வளர்ச்சி மேலும் பொடுகு வறட்சி போன்றவை நீங்கும்.

      கறிவேப்பிலை பொடியை தினமும் இரண்டு தேக்கரண்டி சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தோடு தலைமுடி கருகருவென அடர்த்தியாக வளரும்.

        கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை ஆகிய நான்கையும் ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டு நன்கு அரைக்கவும். பின் அதை சுத்தமான ஒரு கப் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும்(காய்ச்சும்போது பச்சை நிறம் மாறக்கூடாது). காய்ச்சிய எண்ணெயை ஒரு நாள் வைத்து பின் அதை வடிகட்டி வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் தேய்த்து சீயக்காய் போட்டு குளித்தால் தலை முடி கொட்டுவது நிற்கும்.
வெந்தயம் மற்றும் குன்றிமணியை நன்றாக அறைந்து அதை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஒரு வார காலம் ஊறவைத்து பின் தினமும் அந்த தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டுவது கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

தலைமுடிக்கு தைலம்;

         கோபுரந்தாங்கி இலைகளை கைப்பிடி அளவு என்ற எண்ணிக்கையில் சேகரித்துக் கொண்டு, அந்த இலைகளைப் பிழிந்து சாறெடுத்து தனியே வைத்துக் கொண்டு, வாணலியில் கால் லிட்டர் நல்லெண்ணெய்யை விட்டு, சற்று சூடு வந்ததும், கோபுரந்தாங்கி இலைச்சாற்றை எண்ணெய்யில் கலந்து, இலையின் பச்சை வண்ணம் எண்ணையில் நன்கு ஏறும்வரை கொதிக்க வைத்து, பின்னர் இந்த எண்ணை ஆறியதும், ஒரு குடுவையில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

உபயோகிக்கும் முறை;

         குளிக்கும் முன் கோபுரந்தாங்கி தைலத்தை தலையில் தடவி, அரை மணிநேரம் தலையில் ஊறிய பின், தலையை நன்கு அலசி குளித்து வர, தலைச் சூடு குறைந்துவிடும்.
உடல் குளிர்ச்சி அடைந்து, கண் பார்வை மேம்படும், தலைமுடி உதிர்தல் குணமாகி, தலைமுடி கருமையாக நன்கு வளரும்

        வெந்தயம் 2 தேக்கரண்டி , சீரகம் 2 தேக்கரண்டி மற்றும் கறிவேப்பிலை கூந்தலுக்கு தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும் வெந்தயம் மற்றும் சீரகத்தை ஒரு நாள் முன் ஊறவைக்கவும். நன்கு ஊற வைத்த வெந்தயம் மற்றும் சீரகத்துடன் கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.இதனை தலையில் தடவி 45 பிறகு தலையை அலசவும் வாரம் இருமுறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.கறிவேப்பிலை, செம்பருத்திப் பூ மற்றும் மருதாணியை அரைத்து சிறிது சிறிதாக காயவைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தினசரி உபயோகித்து வந்தால் நல்ல பலன் தரும்.

புழு வெட்டுவை தடுக்க;

         சிலருக்கு, தலைமுடி சில இடங்களில், கொத்துகொத்தாக நீங்கி இருக்கும், விஷப்பூச்சிகளின் கடியினாலோ அல்லது அவற்றின் எச்சத்தாலோ உண்டாகும் இந்த பாதிப்புகள், சமயங்களில் மன உளைச்சலையும் ஏற்படுத்தக் கூடியது. இந்த பாதிப்புகள் நீங்க, கோபுரந்தாங்கி தைலம் ஒரு வரப்பிரசாதமாகும்.
மேற்சொன்ன முறையில் இந்த தைலத்தை தலையில் தேய்த்து குளித்து வர, தலைப் புண், புழு வெட்டு, படை போன்றவை குணமாகி, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் திரும்பவும், முடி கருகருவென வளர ஆரம்பிக்கும்.

Comments

Popular Posts